"EMPLOYMENT NEWS" No.1 JOB ORIENTED TAMIL WEEKLY

CA படித்தவர்களுக்கு விஜயா வங்கியில் மேலாளர் பணி

CA படித்தவர்களுக்கு விஜயா வங்கியில் மேலாளர் பணி 
(April 22-28)

விஜயா வங்கியில் Charted Accountant பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Advt.No 2/2015

1. பணியின் பெயர்: Probationary Manager [Post Code:01] [Charted Accountant]

2. No of Vacancies -27 [SC-4, ST-2, OBC-7, UR-14]. இதில் காது கேளாதோருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. சம்பளம் : Rs. 19,400-28,100 ,

4. Age: 01-03-2015 தேதிப்படி 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும் , OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 5 வருடங்களும் சலுகை தரப்படும்.

5. கல்வித் தகுதி: 1-03-2015 தேதிப்படி CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் CA பணி அனுபவம் பெற்றிருப்பது நலம்.

6. தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு (Online exam) , நேர்முகத்தேர்வு (Interview) , குழு விவாதம் (Group Discussion) போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். எழுத்து தேர்வுக்கான அழைப்புக்கடிதம் (Hall Ticket ) இணையதளத்திலும் Download செய்து கொள்ளலாம்.

7. விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு Rs. 300. SC/ST/PH பிரிவினருக்கு Rs.50 மட்டும் . விண்ணப்பக் கட்டணத்தை Credit Card / Debit Card / Internet Banking போன்ற ஏதாவது ஒருமுறையில் Online மூலம் செலுத்தலாம்.

8. விண்ணப்பிக்கும் முறை:
www.vijayabank.com என்ற இணையதளம் மூலம் Online முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் Online விண்ணப்ப பதிவு எண் அடங்கிய Print out ஐ Download செய்து தேவையான இடத்தில் Passport Size  அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி அதனுடன் கல்வித்தகுதி , Age, Experience, Cast (ஜாதி) , உடல் ஊனம் போன்ற தேவையான சான்றுகளின் அட்டெஸ்ட் நகல்களை இணைத்து அனுப்பவும். வயது சான்றிற்கு பதிலாக 10-ம் வகுப்பு / +2 கல்வி சான்றிதழை இணைத்து அனுப்பவும்.
           விண்ணப்பத்தை Ordinary Post ல் அனுப்பவும். விண்ணப்பக் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் (Name of the post ), Post Code ஆகியவற்றை குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Vijaya Bank,
P.O.Box No.5136,
G.P.O.Bangalore-560001.

Online-ல் விண்ணப்பிக்க கடைசி நாள் (last Date) 29-04-2015. தபாலில் விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 09-05-2015

No comments:

Post a Comment