நகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்

நகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்

சென்னை நகராட்சி நிர்வாக ஆணைய அலுவலகத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி (வேதியியல்) மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி

சுகாதார ஆய்வாளர்

110 இடங்கள் (பொது-34, பிற்பட்டோர்-29, பிற்பட்டோர் முஸ்லிம்-4, மிகவும் பிற்பட்டோர்-22, எஸ்சி-17, அருந்ததியர்-3, எஸ்டி-1).

தகுதி:

வேதியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் சென்னை மக்கள் நல்வாழ்வு சேவை மற்றும் குடும்ப கட்டுப்பாடு கூடுதல் இயக்குநர் அலுவலகம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது மும்பை பொது சுகாதார அலுவலர் அல்லது காந்தி கிராம ஊரக நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது:

1.7.2018 அன்று பொதுப் பிரிவினருக்கு 30க்குள். ஓபிசி, எம்பிசி, முஸ்லிம்களுக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 2 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டிக்கு 5 ஆண்டுகளும் தளர்வு விதிக்கப்படும்.

சம்பளம்:

ரூ.35,400 மற்றும் இதர படிகள். 

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு cma.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Commissioner of Municipal Administration,
6th floor, Ezhilagam Annex Building,
Kamarajar salai,
Chepauk,
Chennai-600005.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 19.01.2018

Comments