Showing posts with label CURRENT AFFAIRS DAILY. Show all posts
Showing posts with label CURRENT AFFAIRS DAILY. Show all posts

Thursday, March 19, 2020

கொரோனாவுக்கு பலன் அளிக்கும் ஜப்பான் மருந்து- 'ஏவிகேன்'




ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 'ஏவிகேன்' என்ற வைரஸ் தடுப்பு மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலனை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.


latest tamil news


ஏவிகேன் மருந்தில் உள்ள 'பேவிபிராவிர்' என்ற உட்பொருள், நுரையீரல் செயலிழப்பை சீராக்கி விரைவில் குணப்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு

NirbhayaCase,NirbhayaVerdict,NirbhayaJustice,Finally,hang,நிர்பயா,தூக்கு
'நிர்பயா' வழக்கு குற்றவாளிகள், 4 பேரும் திஹார் சிறையில், இன்று(மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு, தூக்கிலிடப்பட்டனர். குற்றம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பின், 'ஒரு வழியாக' அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Saturday, March 14, 2020

SAARC நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

SAARC- South Asian Association for Regional Cooperation

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலில் சென்னை அணி ஏமாற்றியது. கலக்கலாக ஆடிய கோல்கட்டா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது


இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடந்தது. கோவாவின் படோர்டா மைதானத்தில் நடந்த பைனலில் தலா இரு முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை, கோல்கட்டா பலப்பரீட்சை நடத்தின.

4வது நிமிடத்தில் சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடிக்க கிடைத்த எளிதான வாய்ப்பை கோட்டை விட்டார். இவர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டுத் திரும்பியது. 11வது நிமிடம் கோல்கட்டா வீரர் ராய் கிருஷ்ணா கொடுத்த பந்தை பெற்ற ஜாவி ஹெர்னாண்டஸ், இடது காலால் அடித்து கோலாக மாற்றினார்.

27, 28வது நிமிடங்களில் வால்ஸ்கிஸ் எடுத்த கோல் முயற்சிகள் வீணாகின. 30வது நிமிடம் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் ஸ்கீம்ரி தலையால் அடித்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். சென்னை அணியின் அடுத்தடுத்த முயற்சிகள் வீணாக, முதல் பாதியில் 0–1 என பின்தங்கியது.

வால்ஸ்கிஸ் ஆறுதல்

இரண்டாவது துவங்கிய 3வது நிமிடம் கோல்கட்டா வீரர் கார்சியா ஒரு கோல் அடிக்க, கோல்கட்டா 2–0 என முந்தியது. 69 வது நிமிடம் ஜெர்ரி கொடுத்த பந்தை வாங்கிய வால்ஸ்கிஸ், கோல் அடித்து நம்பிக்கை தந்தார்.

கடைசி நிமிடத்தில் கோல்கட்டாவின் ஜாவி (90+3வது) மற்றொரு கோல் அடித்தார். முடிவில் கோல்கட்டா அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. 2014, 2016க்குப் பின் மூன்றாவது முறையாக (2020) கோல்கட்டா கோப்பை வென்றது.


ரசிகர்களுக்கு ‘நோ’

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அனைத்து போட்டித் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டன. ஐ.எஸ்.எல்., தொடரின் பைனல் மட்டும் நேற்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை ‘அட்வைஸ்’ படி, ரசிகர்கள் யாரும் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை.

Sunday, March 1, 2020

current affairs March 2020

2-3-2020
இந்தியாவிலேயே புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழகம்.

2.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உருவம் பொறித்து, 2,020 கிலோவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட கேக், ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ரோட்டரி சங்கம் மற்றும் கேக் வேல்டு நிறுவனம் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், '2020ல் இந்தியா வல்லரசாகும்' என்ற கனவை நினைவுகூரும் வகையில், சில தினங்களுக்கு முன், புதிய முயற்சி மேற்கொண்டன.இதன்படி, 2,020 கிலோவில், அவரது உருவம் பொறித்த, பிரமாண்ட கேக்கை, 30 பேர் சேர்ந்து தயாரித்தனர்.
இந்த நிகழ்ச்சி, சென்னை, காட்டுப்பாக்கத்தில் உள்ள, கேக் வேல்டு அலுவலகத்தில் நடந்தது. ஆசியாவிலேயே முதல் முறையாக, அப்துல் கலாமின் உருவம் பொறித்து, 2,020 கிலோவில்
தயாரிக்கப்பட்ட முதல் கேக் என, ஆசிய சாதனை புத்தக குழுவினர் உறுதி செய்தனர்.இந்த கேக், 25 அடி நீளம், 31 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டது. கேக்கை, அப்துல் கலாமின் அண்ணன் மகன், ஏ.பி.ஜே.ஷேக் சலீம் வெளியிட்டார்.

1-3-2020
1. தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 40 நாட்களில் தீர்வு காணப்படும்,'' என, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தெரிவித்தார்.

Thursday, February 27, 2020

current affairs February 2020 and gk

27/2/2020
1. ஸ்ரீஹரிகோட்டாவில் 5ம் தேதி ஏவப்படுகிறது, 'ஜிஐசாட் - 1'

இந்த ஆண்டு, நாட்டின் பாதுகாப்புக்காக மட்டும், 10 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.புவி கண்காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவற்றுக்காக, இரண்டு, 'ஜியோ இமேஜிங்' செயற்கைக்கோள்களை தயாரிக்க, இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கு, 'ஜிஐசாட்- 1, ஜிஐசாட் - 2' என, பெயரிடப்பட்டது.இதில், ஜிஐசாட் - 1ஐ, மார்ச் மாதத்திலும், ஜிஐசாட் - 2ஐ, ஐூன் மாதத்திலும் விண்ணில் செலுத்த, இஸ்ரோ திட்டமிட்டது.இதன்படி வரும், மார்ச் 5ம் தேதி, ஜிஐசாட் - 1 விண்ணில் செலுத்தப்பட உள்ளது என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, 5ம் தேதி மாலை, 5:43 மணிக்கு, ஜிஐசாட் - 1 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி., - எப் 10 ராக்கெட், இந்த செயற்கைக்கோளை விண்ணுக்கு சுமந்து செலகிறது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில், விண்ணுக்கு இஸ்ரோ செலுத்தும், 14வது ராக்கெட் இது. ஜிஐசாட் - 1 செயற்கைக்கோள், 2,275 கிலோ எடை கொண்டது. விண்ணில் செலுத்தப்பட்ட பின், இது புவி கண்காணிப்பு, வானிலை ஆய்வு பணிகளில் ஈடுபடும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2. சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

Wednesday, February 26, 2020

காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை



உலகின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் பல நகரங்களில் காற்றின் தரம், மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்ற அளவிற்கு மிகவும் மாசடைந்து வருகிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப்புகை எனப் பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.


இந்நிலையில், 'ஐ.கியூ., ஏர் - ஏர் விசுவல்' என்ற நிறுவனம் உலகில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில், உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்த இந்தியா, இரு படிகள் முன்னேறி, ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது. மேலும், உலக அளவில், மிகவும் காற்று மாசடைந்துள்ள, 30 நகரங்களில், 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



குறிப்பாக, புதுடில்லியின் காஜியாபாத் உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்து வரும் நகரமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதியின் காற்று மாசு, முன்பை விட, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைந்த இளம் போராளிகள் கிரேட்டா தன்பெர்க்  மலாலா யூசப் ஆகியோர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இரு இளம்போராளிகளான கிரேட்டா தன்பெர்க், மலாலா யூசப் ஆகியோர் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் சந்தித்து கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

2012 ம் ஆண்டு பாக்.,ன் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்த மலாலா யூசுப்பை (22) தாலிபன்கள் கழுத்தில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த மலாலா, நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தார் . தொடர்ந்து பெண் கல்விக்காக குரல்கொடுக்கும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பயின்று வருகிறார்.

அதேபோல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் (17), கடந்தாண்டு செப்., மாதத்தில் நியூயார்க் நகரில் ஐ.நா., சபையில் பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக பேசியது உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார்.
GretaThunberg, MalalaYousafzai, OxfordUniversity, Meeting, Instagram, Picture, Viral, மலாலா, கிரேட்டா, ஆக்ஸ்போர்டு, பல்கலைகழகம், பல்கலை, சந்திப்பு, இன்ஸ்டாகிராம், வைரல், புகைப்படம்

பிரிட்டனில் காலநிலை பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் கிரேட்டா கலந்துகொண்டார். அப்போது அதன் அருகில் இருந்த ஆக்ஸ்போர்டு பல்கலை.,க்கு சென்று மலாலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மலாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த புகைப்படம் இதுவரை 3.7 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது. இதற்கு அமெரிக்க நடிகை மைன்டி காலிங், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Tuesday, February 25, 2020

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Total Pageviews

Followers

Popular Posts

Follow Me

tnschools facebook group

 
Tnschools.co.in Group
Public group · 200049 members
Join Group